சிறந்த நல்லாசிரியர் விருது வழங்கும் விழா – ஐந்து ரூபாய் பாடசாலை – 2024

rce_teachers_day_2024

Right Club for Education (₹5 ரூபாய் பாடசாலை) சார்பாக 15.09.2024 அன்று ஆசிரியர் தின விழாவைக் கொண்டாடும் விதமாக சிறந்த நல்லாசிரியர் விருது வழங்கும் விழா நடத்தப்பட்டது. செப்டம்பர் 2ல் துவங்கி 10ம் தேதி வரை online form மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் இணையத்தில் அனுப்பி ஆசிரியர்களின் திறமை மற்றும் பொது நலத் தொண்டு அடிப்படையில் பல துறைகளைச் சார்ந்த 15 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் திரு சந்திரபோஸ் மற்றும் RCE ஐந்து ரூபாய் பாடசாலையின் ஆலோசகர் திரு சந்திரராஜன் ஐயா அவர்களும் இணைந்து விருதுகள் வழங்கி சிறப்பு செய்தனர்.

மேலும் RCE குழுமத்தில் மாணவர்களின் நலனுக்காக செயலாற்றி வரும் ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வை சிவகாசி திரு. NRKR ஆட்ஸ் கிளப் மைதானத்தில் RCE (ஐந்து ரூபாய் பாடசாலை) குழும உறுப்பினர்கள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.