#24-08-2025
ஞாயிற்றுக்கிழமை நமது சிவகாசி மாநகரில் நமது “#ஐந்து_ரூபாய்_பாடசாலை” மூலமாக நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு “#மாரத்தான்” நிகழ்வில் 25௦௦கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என ஏழு பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் என தனித்தனியாக நடைபெற்றது. இந்த நிகழ்வை உயர்திரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களும் மற்றும் சிவகாசி லவ்லி உரிமையாளர் திரு.செந்தில் அவர்களும் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதில் உயர்திரு. காவல் துணை கண்காணிப்பாளர், ஆய்வாளர் மற்றும் துணை ஆய்வாளர் மற்றும் மருத்துவர்கள் திரு.சண்முகராஜன் அவர்கள், திரு.மதன் அவர்கள் மற்றும் திருமதி திலகபாமா என அனைவரும் மற்றும் போக்குவரத்து சீரமைப்பு தன்னர்வலர்களும் கலந்து கொண்டனர்.
இதில் பொதுமக்களுக்கு அளித்த 5௦௦௦ தண்ணீர் பாட்டில்களில் சாலை மற்றும் சாக்கடைகளில் வீசி சென்ற காலி பாட்டில்களை 3௦௦௦ கும் மேற்பட்ட பாட்டில்களை நமது குழு மற்றும் போக்குவரத்து சீரமைப்பு தன்னர்வலர்களுடன் சேர்ந்து சேகரித்தோம். இதன் மூலம் எங்கள் ஒரு குறிக்கோளான “#தூய்மையான_சிவகாசி” யை செயல்படுத்தினோம்.
பங்களித்த அனைவருக்கும், உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றிகள்!!!

