விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த தன்னார்வ அமைப்பான ரைட் க்ளப் பார் எஜூகேசன் அமைப்பினர், மாணவர்களுக்காக ரூ.5 கட்டணத்தில் பாடசாலை ஒன்று நடத்தி வருகின்றனர். மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்காக தொடர்ந்து பல முயற்சிகளில் ஈடுபட்டு வரும் இவர்கள் கோடைகாலம் தொடங்கியது முதல் மாணவர்களுக்கு இலவச கோடைகால பயிற்சி முகாம் நடத்தினர்.
இதில் மாணவர்களுக்கு ஓவிய பயிற்சி, கலைப்பொருட்கள் தயாரிப்பு, கணிணி பயிற்சி முதலிய பயிற்சிகள் வழங்கப்பட்ட சுழலில் பயிற்சி முடிவில் மாணவர்கள் உருவாக்கிய கலைப்பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிக்கு வைக்கப்பட்டன.










