கல்வி மேளா – 2024

Right Club for Education (₹5 ரூபாய் பாடசாலை) கல்விமேளா – 2024 என்ற நிகழ்வை 09.11.2024 மற்றும் 10.11.2024 ஆகிய இரண்டு நாட்கள் சுப சங்கமம் திருமண மண்டபத்தில் நடத்தியது. இந் நிகழ்வில் சிவகாசியைச் சேர்ந்த பல்வேறு பள்ளிகள் கலந்துகொண்டன. மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும் வகையில் கட்டுரை, ஓவியம், பேச்சு, நடனம், நாடகம், முக ஓவியம், மௌன நாடகம் உள்ளிட்ட 16 போட்டிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு போட்டிக்கும் மூன்று பரிசுகள் வீதம் 16 போட்டிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. அனைத்து போட்டிகளிலும் பெற்ற மொத்தப் புள்ளிகளின் அடிப்படையில் முதல் பரிசை சிவகாசி இந்து நாடார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் இரண்டாம் பரிசை செண்பக விநாயகர் மெட்ரிகுலேஷன் பள்ளியும் பெற்றனர். 650 மாணவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வை RCE உறுப்பினர்கள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.